தொடரும் மின்சாரத் தடை விவகாரம் : விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு!
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கப் பெறவில்லை என சிறிலங்கா பொது ப்ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறுமென எதிர்பார்க்கப்படுவதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மஞ்சுல பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர், மின்சார சபையின் உயரதிகாரிகளை ஆணைக்குழு முன்னிலையில் அழைத்து காரணங்களைக் கேட்டறிய நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.
விசேட விசாரணைக் குழுக்கள்
இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் ஆராய வெளியகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மின்வெட்டு தொடர்பிலான விசாரணைகளுக்காக அரச புலனாய்வு சேவைப் பிரிவின் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |