ஜுலி சங்கை சந்தித்த உலக தமிழர் பேரவையினர் (படங்கள்)
உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கை இன்று சந்தித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜுலி சங் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மதத்தின் நான்கு முக்கிய உயர் பீடங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த தேரர்களும் இந்த சந்திப்பில் பங்கெடுத்துள்ளனர்.
உலக தமிழர் பேரவையின் நடவடிக்கை
சமூகங்களுக்கு இடையேயான புரிதலை விரிவுபடுத்துவதற்கு உலக தமிழர் பேரவையினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை ஜுலி சங் பாராட்டியுள்ளார்.
அத்துடன், நீடித்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த பேரவையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Today, I hosted members of Global Tamil Forum @GTFonline and Sangha for a Better Sri Lanka at our embassy. We welcome their laudable initiative to expand cross-community understanding and seek lasting reconciliation. pic.twitter.com/qp1sBZ2fLA
— Ambassador Julie Chung (@USAmbSL) December 12, 2023
நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சாரம் : இலங்கை மின்சார சபை பொறுப்பேற்க வேண்டுமென தயாசிறி வலியுறுத்து!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |