மொட்டுக் கட்சிக்கு சாதகமான ட்ரம்பின் எக்ஸ் பதிவு!
இலங்கை உட்பட ஒன்பது நாடுகளின் அரசாங்கங்களை கவிழ்க்க அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் பணம் செலவழிக்கப்பட்டதாக வெளியான தகவலானது, மக்களை ஏமாற்றி பலாத்காரம் மற்றும் மோசடி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களுக்கு கிடைத்த இயற்கையான தண்டனை சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவத்துள்ளது.
கட்சி தலைமையகத்தில் மாவட்டத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவத்த போது அக்கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) இதனை தெரிவித்துள்ளார்.
போராட்டங்களை நடத்தவும், அரசாங்கங்களை கவிழ்க்கவும், பௌத்த மதத்தை அவமதிக்கவும், நாட்டின் கலாச்சாரத்தை அழிக்கவும் வெளிநாட்டு செல்வாக்கு மூலம் வெளிநாட்டு பணம் பெறப்படும் என்று தான் ஏற்கனவே கூறியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் எக்ஸ் பதிவு
அந்தக் கூற்றுகளின் உண்மை தற்போது வெளிப்பட்டு வருவதாகக் கூறிய சாகர, இலங்கை, பங்களாதேஷ், உக்ரைன் உள்ளிட்ட ஒன்பது நாடுகளின் அரசாங்கங்களைக் கவிழ்க்க USAID எனப்படும் அமைப்புகள் மூலம் 260 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ 'X' கணக்கு மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்தோடு, இலங்கையில் பாலியல் நோக்குநிலை பிரச்சினைகள் குறித்து விசாரிப்பதற்காக 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் வழக்கறிஞர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)