யாழ். கடற்பரப்பில் கடற்படையிடம் சிக்கிய இருவர் கைது
யாழ். (Jaffna) கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இன்று (01.04.2025) இடம்பெற்றுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கட்டைக்காடு பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
கைது நடவடிக்கை தொடர்பில் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று(01) அதிகாலை கடற்படையினர் கட்டைக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் யாழ். நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
