நாடு முழுவதும் தயார் நிலையில் இருக்கும் கடற்படை மீட்புக்குழு!
weather
sri lanka
people
By Shalini
வானிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நிவாரணக் குழுக்களை அனுப்பியதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், இரத்தினபுரி மாவட்டத்திற்கு 3 நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டன, மற்றொரு குழு காலிக்கு அனுப்பப்பட்டது.
மேலும், வெலிசர மற்றும் கொழும்பு கடற்படை முகாம்களில் இருந்து 24 இலங்கை கடற்படை மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், காலி கடற்படை முகாமில் இருந்து ஆறு நிவாரணக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.