நாவற்குழி விகாரை பிக்கு கைது விவகாரம் : சுமந்திரனை குற்றஞ்சாட்டும் கஸ்ஸப தேரர்

Tamils Jaffna M A Sumanthiran ITAK
By Independent Writer Apr 21, 2026 11:29 AM GMT
Report

யாழ்ப்பாணம் - நாவற்குழி விகாரை பிக்கு கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் செயலாளர் ஆகியோர் முன்னின்று செயற்பட்டுள்ளதாக பலாங்கொடை கஸ்ஸப தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ”கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி நாவற்குழி விகாரையில் பிக்கு ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை திட்டமிட்ட ஒரு சதியாகும்.

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் சர்வதேச தங்க முதலீட்டாளர்கள்

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் சர்வதேச தங்க முதலீட்டாளர்கள்

அநுரகுமாரவும் அரசாங்கமும்

ஒரு மதத் தலத்திற்குரிய ஆடை ஒழுக்கத்தை மீறி பிரவேசிக்க முயன்ற யுவதிக்கு அறிவுறுத்தியதற்காக, குறித்த பிக்கு மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

நாவற்குழி விகாரை பிக்கு கைது விவகாரம் : சுமந்திரனை குற்றஞ்சாட்டும் கஸ்ஸப தேரர் | Nawatkuli Vihara Monk Arrested Kassapa Thero

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் செயலாளராகக் கடமையாற்றும் சயந்தன் ஆகியோர் முன்னின்று செயற்பட்டுள்ளனர்.

எவ்வித தவறும் செய்யாத பிக்குவை விகாரையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது. இது வடக்கிலிருந்து பிக்குகளைத் தந்திரோபாயமாக வெளியேற்றும் ஒரு முயற்சியாகும்.

பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் அநுரகுமாரவும் அரசாங்கமும், இவ்விடயத்தில் மௌனம் காப்பது ஏன். ஒரு மதத்தின் எழுச்சியும் விழிப்புணர்வும் அந்த மதம் சார்ந்த மக்கள் குறைவாக வாழும் பகுதிகளிலேயே ஏற்படுத்தப்பட வேண்டும்.

உலக வரலாற்றில் மிக மோசமான எரிசக்தி நெருக்கடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உலக வரலாற்றில் மிக மோசமான எரிசக்தி நெருக்கடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பௌத்த சாசன அமைச்சுக்கு முன்னால் போராட்டம்

அந்த வகையில், பௌத்த எழுச்சி என்பது தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அவசியமானது. ஆனால், திட்டமிட்ட அடிப்படையில் அங்கிருக்கும் பிக்குகளை வெளியேற்றிவிட்டு, அப்பிரதேசங்களைத் தனித்துவமான வலயங்களாக மாற்றச் சூழ்ச்சிகள் நடக்கின்றன.

பிக்குகளை வடக்கிலிருந்து வெளியேற்றி, அங்கு தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை உறுதிப்படுத்த இந்த அரசாங்கம் முற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.  

நாவற்குழி விகாரை பிக்கு கைது விவகாரம் : சுமந்திரனை குற்றஞ்சாட்டும் கஸ்ஸப தேரர் | Nawatkuli Vihara Monk Arrested Kassapa Thero

நாவற்குழி விகாரையில் அநியாயமாகப் பாதிக்கப்பட்ட பிக்கு, மீண்டும் அந்த விகாரையிலேயே தங்கித் தனது மதப் பணிகளைத் தொடர்வதற்கான சட்டப் பூர்வமான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காகப் புத்த சாசன அமைச்சருக்கு இரண்டு வார கால அவகாசத்தை வழங்குகிறோம்.

இந்த காலப்பகுதிக்குள் குறித்த பிக்குவுக்கு நீதி வழங்கப்பட்டு, அவர் மீண்டும் நாவற்குழி விகாரைக்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்படாவிட்டால், மகா சங்கத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து பௌத்த சாசன அமைச்சுக்கு முன்னால் பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம்” என தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்