வழமைக்கு திரும்பிய நாயாறு பாலத்தின் ஊடான போக்குவரத்து
முல்லைத்தீவு - நாயாறு பால வீதி புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் குறித்த பாலத்தினூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
நேற்றையதினம் (07.01.2026) முதல் குறித்த வீதியின் ஊடாக மக்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
டித்வா புயல் மற்றும் மழை வெள்ளத்தினால், முல்லைத்தீவு மாவட்டத்தில் முக்கிய பாலமாக காணப்படும் நாயாறு பாலம் உடைந்து போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் பாலத்தின் திருத்தப்பணிகள் இடம்பெற்று வந்தன.
புனரமைப்பு பணிகள் நிறைவு
சேதமடைந்த குறித்த பால புனரமைப்பு பணிகளில் இலங்கை இராணுவத்தின் பொறியில் பிரிவினர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் இணைந்து மேற்கொண்டனர்.

இந்த நிலையில் திருத்தப்பணிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த வீதி ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
இதேவேளை குறித்த பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள், பாலத்தின் எந்த இடத்திலும் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் பாலத்தை ஒரு வழிப் பாதையாக (One-way) மட்டும் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |