நெடுந்தீவு ஊரும் உறவு நிறுவனத்தினால் மின்குமிழ்கள் வழங்கிவைப்பு
நெடுந்தீவு ஊரும் உறவு நிறுவனத்தினால் வீதி ஓரங்களில் ஒளிரக்கூடிய மின்குமிழ்கள் மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டன.
ஒற்றைப்பனை பகுதியைச் சேர்ந்த திருலிங்கபுரம் கிராம அபிவிருத்திச்சங்கம் தமது பிரதேசத்தில் இரவு நேரங்களில் நடமாடுவதற்கு போதுமான பாதுகாப்பு இல்லாமையால் அங்கு பாம்பு பூச்சியின் நடமாட்டம் இருப்பதாகக் கூறி நெடுந்தீவு ஊரும் உறவு நிறுவனத்தினத்திடம் மின்குமிழ்களைக் கோரி இருந்தார்கள்.
அதற்கான கோரிக்கையினைப் பெற்ற நெடுந்தீவு ஊரும் உறவும் அதன் அங்கத்தவர்களில் ஒருவரான பாலசிங்கம் பாலசிறிதரன் அவர்களிடம் இந்த அவசர தேவையினை முன்வைத்த போது, அதனை உடனடியாக செயற்படுத்தும் வகையில் 17.09.2023இல் திருலிங்கபுரம் கிராம அபிவிருத்திச்சங்கத்திடம் மின்குமிழ்கள் ஒப்படைக்கப்பட்டன.
மேற்படி மின்குமிழ்கள் கையளிக்கும் நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை 10.30 மணியளவில் நெடுந்தீவு ஊரும் உறவின் தலைவர் எ.கலின்குமார் தலைமையில் ஊரும் உறவு அலுவலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி நவில்தல்
இதன் போது ஊரும் உறவு பிரதிநிதிகள், திருலிங்கபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் இணைந்து கொண்டனர்.

எனவே திருலிங்க புரம் கிராம அபிவிருத்தி சங்கம் தமது நன்றிகளை ஊரும் உறவிற்கும் அதன் செயற்படு உறுப்பினரான பாலசிங்கம் பாலசிறிதரனுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.