நாமலின் கிரிஸ் வழக்கு! இந்திய சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை
கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, நீதி சேவை ஆணைக்குழுவின் சுற்றறிக்கைகளின் படி, இரண்டு இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
இரண்டு சாட்சிகள்
அந்த இரண்டு சாட்சிகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்ததையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ண சுவந்துருகொட இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நாட்டில் ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாக தெரிவித்து இந்தியாவின் கிரிஸ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டதன் ஊடாக நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து சட்டமா அதிபரினால் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 9 மணி நேரம் முன்