சஹ்ரானுக்கு தாக்குதல் நடத்தவேண்டிய தேவை என்ன? அமைச்சர் வெளியிட்ட தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சஹ்ரானுக்கு தாக்குதல் நடத்த இருந்த தேவை என்ன என்பது தெரியவர வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை முழுமையானது அல்லவெனவும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம் அதில் இடம்பெறவில்லையெனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு,
இந்த தாக்குதலுடன் நாட்டில் பாரிய இனக்கலவரம் நடந்திருந்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கும். தேர்தல் நடந்திருக்காது. MCC உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கும்.என்ற இரண்டு சந்தேகங்களை அவர் வௌியிட்டுள்ளார்.
எனவே இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.