தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை வலியுறுத்தும் தமிழரசு எம்.பி

Sri Lankan Tamils Tamil National People's Front Government Of Sri Lanka ITAK Pathmanathan Sathiyalingam
By Sathangani Jan 05, 2025 04:45 AM GMT
Report

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து எட்டப்படும் இணக்கப்பாடானது தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு இடையிலானதாக இருக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவர் சி.இரத்தினவடிவேல் கடந்த வெள்ளிக்கிழமை (03) ப.சத்தியலிங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கிறார்.

அக்கடிதத்தில், தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைவு குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் (Gajendrakumar  Ponnambalam) முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் அவரை முன்னிலைப்படுத்துவதையும், தமிழரசுக்கட்சியைப் பலவீனப்படுத்துவதையும் இலக்காகக் கொண்ட உபாயம் மாத்திரமே எனவும், ஆகவே இவ்விடயம் தொடர்பில் அவருடன் சிறீதரன் (S. Shritharan) மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தமிழர் நலனுக்கோ, கட்சிக்கோ உகந்ததல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிந்தவின் பாதுகாப்பு குறித்து சி. வி விக்னேஸ்வரன் அதிரடி கருத்து

மகிந்தவின் பாதுகாப்பு குறித்து சி. வி விக்னேஸ்வரன் அதிரடி கருத்து

தமிழர் பிரச்சினை

இந்த நிலையில் இதுகுறித்து சத்தியலிங்கம் தெரிவிக்கையில், “தமிழர் பிரச்சினை என்று வருகிறபோது அது பொதுவானதொரு விடயமாகும். எனவே தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து சகல தமிழ்த்தரப்புக்களும் ஒன்றிணைந்து தான் செயற்படவேண்டும். அதுவே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை வலியுறுத்தும் தமிழரசு எம்.பி | Needs To Be Unity Among Tamil Nationalist Parties

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒருமித்து செயற்படுவதை இலக்காகக்கொண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சியை வரவேற்கின்றோம், அதுகுறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்குத் தாம் தயாராக இருக்கின்றோம்.

இருப்பினும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் ஒன்றிணைந்து தீர்மானிக்கமுடியாது.

நிதிமோசடி குறித்து முன்னாள் அமைச்சரிடம் வாக்குமூலம் : வெளியான அறிவிப்பு

நிதிமோசடி குறித்து முன்னாள் அமைச்சரிடம் வாக்குமூலம் : வெளியான அறிவிப்பு

புதிய முன்மொழிவு

எனவே இவ்விடயத்தில் எட்டப்படும் இணக்கப்பாடு என்பது தமிழ்த்தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலானதாக அன்றி, தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாடாக இருக்கவேண்டும்.

தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை வலியுறுத்தும் தமிழரசு எம்.பி | Needs To Be Unity Among Tamil Nationalist Parties

இங்கு தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக தமிழர் நலன்களைப் பகடைக்காயாக்க முடியாது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்று வருகிறபோது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவு உள்ளடங்கலாக மேலும் பல முன்மொழிவுகள் மற்றும் வரைவுகள் இருக்கின்றன.

எனவே அவையனைத்தையும் ஆராய்ந்து, அவற்றில் உள்ள சிறந்த விடயங்களை உள்ளடக்கி, எமது அடிப்படைக் கோட்பாட்டில் இருந்து விலகாமல், தற்கால சூழலுக்கு ஏற்றவாறான புதிய முன்மொழிவொன்றை ஒருமித்துத் தயாரித்து அரசாங்கத்திடம் கையளிக்கவேண்டும்“ என தெரிவித்தார்.

சுமந்திரனின் கைப்பாவையான சி.வி.கே : சர்வாதிகார உச்சத்தில் தமிழரசுக் கட்சி

சுமந்திரனின் கைப்பாவையான சி.வி.கே : சர்வாதிகார உச்சத்தில் தமிழரசுக் கட்சி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020