யாழ் பல்கலைக்கழக சட்டத்துறையின் நீதம் சட்ட இதழ் வெளியீடு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna) சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுக்கும் நீதம் சட்ட இதழ் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக கைலாசாபதி கலையரங்கில் இன்று (12) காலை 9.30 மணியளவில் இந்த இதழ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட உயர் நீதிமன்ற (Supreme Court of Sri Lanka) நீதியரசர் குமுதினி விக்கிரமசிங்கேவினால் நீதம் சட்ட இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது.
ஒன்பதாவது இதழ் வெளியீடு
அத்துடன் இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் கௌரவ விருந்தினராக பங்கேற்றிருந்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நீதம் இதழ் வெளியிடப்பட்டு வருவதுடன் இம்முறை ஒன்பதாவது தடவையாக வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கோசலை மதன், முன்னாள் துணைவேந்தர்கள் , விரிவுரையாளர்கள், மாணவர்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வின் இறுதியில் சட்டத்துறை மாணவர்களால் எழுதி வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் விருந்தினர்களுக்கான நினைவுச்சினங்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


