நீர்கொழும்பில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண்!
நீர்கொழும்பு, தளுபன பகுதியில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 89 வயதுடைய மூதாட்டி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீக்காயங்களுடன் வீடொன்றில் பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொட்டவெஹர பகுதியிலம் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொட்டவெஹர, திகென்னேவ பகுதியில் இரு குழுக்களுக்கு இடையிலான காணிப் பிரச்சினை காரணமாக 44 வயதுடைய ஒருவர் மண் வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பில் ஒரு தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.