நேபாளத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம் : இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
நேபாளம் - கோர்க்கா மாவட்டம், புடிகண்டகி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கோர்க்கா, தாதிங், நுவாகோட், சித்வான் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புடிகண்டகி ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியிலும் தற்போது தங்கியுள்ள இலங்கையர்கள் உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காத்மண்டு நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், ஆறுகள், ஆற்றங்கரைகள், பாலங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் இலங்கை நாட்டு பிரஜைகளை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
உயரமான இடங்களுக்கு செல்லவும்
உள்ளூர் பாதுகாப்புப் படையினர், மாகாண அதிகாரிகள் மற்றும் சுற்றுலா காவல்துறையினர், வெளியிடும் அறிவுறுத்தல்களைத் தவறாமல் பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த வீதிகள் மற்றும் நீர்நிலைகளைக் கடந்து செல்வதைத் தவிர்க்குமாறும், அதிகாரிகளிடமிருந்து அறிவிப்பு கிடைத்தால் உடனடியாக உயரமான பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் தூதரகம் கோரியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |