புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமான விமானம்!! இந்தியர்கள், ஜப்பானியர்கள் உள்ளிட்டோருக்கு நேர்ந்த கதி
Plane Crash
Nepal
By Vanan
விமானம் தொடர்பு இழப்பு
நேபாளத்தில் தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் சிறிய பயணிகள் விமானம் ஒன்று வெளிநாட்டினர் உட்பட 22 பேருடன் இன்று காணாமல் போனதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 9:55 மணிக்கு புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்தது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே, பொக்காரா - ஜோம்சோம் நகர் பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போது தொடர்பை இழந்தது.
பயணிகள் விபரம்
விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள், நேபாள குடிமக்கள் மற்றும் விமான பணியாளர்கள் என 22 பயணிகள் பேர் பயணித்துள்ளதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
குறித்த விமானம், முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள லெட்டின் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது.



ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்