காசா போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவு: அதிரடியாக நிராகரித்த பெஞ்சமின் நெதன்யாகு

Benjamin Netanyahu Joe Biden Israel World Gaza
By Shalini Balachandran May 06, 2024 10:34 AM GMT
Report

காசா(Gaza) போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல்(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் மற்றும் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இருப்பினும் அந்த பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாததுடன் சமீபத்தில் கெய்ரோவில்(Cairo) நடந்த பேச்சுவார்த்தை நேற்று(05) நிறைவடைந்ததுள்ளது

காணாமற்போனோர் அலுவலகத்தில் உறுப்பினர் வெற்றிடம்: விண்ணப்பங்கள் கோரல்

காணாமற்போனோர் அலுவலகத்தில் உறுப்பினர் வெற்றிடம்: விண்ணப்பங்கள் கோரல்

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் தனது குழுவை அனுப்பவில்லை என தெரிவதுடன் இதனால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை(07) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவு: அதிரடியாக நிராகரித்த பெஞ்சமின் நெதன்யாகு | Netanyahu Rejects Gaza Ceasefire Agreement

நேற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் ரபாவில்(Rafa) இருந்து ஹமாஸ்(Hamas) அமைப்பினர் இஸ்ரேல் நோக்கி உந்துகணைகளை(ரொக்கெட்-Rocket) வீசி தாக்குதல் நடத்தினர்.

கெரெம் ஷாலோம்(Kerem Shalom) எல்லையில் உள்ள இஸ்ரேல் வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இதில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 11 வீரர்கள் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

யேமன் - ஹவுதி மோதல்: 45 ஊடகவியலாளர்கள் பலி

யேமன் - ஹவுதி மோதல்: 45 ஊடகவியலாளர்கள் பலி

போர் நிறுத்த ஒப்பந்தம் 

இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் இந்த தாக்குதலைத் தொடர்ந்து காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.

அத்தோடு இஸ்ரேல் வீரர்கள் வெளியேற வேண்டும் மற்றும் போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசா போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவு: அதிரடியாக நிராகரித்த பெஞ்சமின் நெதன்யாகு | Netanyahu Rejects Gaza Ceasefire Agreement

படைகளை திரும்ப பெற்று போரை நிறுத்தினால் ஹமாஸ் படையினர் தங்கள் பதுங்கு குழிகளில் இருந்து வெளியேறி மீண்டும் காசாவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அவர்களின் இராணுவ கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதாக நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இஸ்ரேல் குடிமக்களை அச்சுறுத்துவதாகவும் இத்தகைய சூழ்நிலையை ஏற்க நாங்கள் தயாராக இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் மாபெரும் நடமாடும் சேவை...!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் மாபெரும் நடமாடும் சேவை...!

சக்திவாய்ந்த நடவடிக்கை

ரபா மற்றும் காசா முழுவதிலும் உள்ள மற்ற இடங்களில் சக்திவாய்ந்த நடவடிக்கை எடுக்கும் காலம் நெருங்கிவிட்டதாக இஸ்ரேல் இராணுவ மந்திரி யோவ் கேலண்ட்(Yoav Gallant) எச்சரித்துள்ளார்.

அத்தோடு ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தில் தீவிரமாக இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளதோடு காசாவின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள இஸ்ரேல் படைகள் தற்போது தெற்கு பகுதியில் உள்ள கடைசி இலக்கான ரபா நகரை முற்றுகையிட்டுள்ளன.

காசா போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவு: அதிரடியாக நிராகரித்த பெஞ்சமின் நெதன்யாகு | Netanyahu Rejects Gaza Ceasefire Agreement

இதனுடன் அங்கு பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் நடவடிக்கையாக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதுடன் விரைவில் தரைவழி தாக்குதலுக்கும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அமெரிக்க(America) அதிபர் ஜோ பைடன்(Joe Biden) மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் எச்சரிக்கைகள் செய்தபோதிலும், ரபாவில் இராணுவ தாக்குதலை நடத்துவதில் நெதன்யாகு உறுதியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் வெள்ளைத் தங்கத்தை தேடும் சீனா...காரணம் இது தான்!

உலகம் முழுவதும் வெள்ளைத் தங்கத்தை தேடும் சீனா...காரணம் இது தான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024