நெதன்யாகுவின் கைது குறித்த வாதங்களில் மீண்டும் திரும்பிய சர்வதேசத்தின் பார்வை!
Benjamin Netanyahu
Israel
World
By Pavi
சர்வதேச மன்னிப்பு சபையின் ஆராய்ச்சி, ஆதரவு, கொள்கை மற்றும் பிரசாரப் பிரிவின் மூத்த இயக்குநரான எரிக்கா குவேரா ரோசாஸ், இஸ்ரேலிய பிரதமருக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இஸ்ரேல், பலஸ்தீனத்திற்கு எதிராக மேற்கொண்டு வரும் யுத்த குற்றங்களை மேற்கோள்காட்டி இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.
சமீபத்தில் நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி, நெதன்யாகுவைக் கைது செய்து காவலில் வைக்க அழைப்பு விடுத்திருந்தார்.
நெதன்யாகு எதிரான பிடியாணை
இந்நிலையில் இதனைத்தொடர்ந்து வந்துள்ள எரிக்கா குவேராவின் அறிக்கை, வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

2024-ல் காசா மீது இஸ்ரேல் நடத்திய போரின்போது போர்க்குற்றங்களைச் செய்ததாக நெதன்யாகு மீது குற்றம் சாட்டி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்