அரசியலை அடியோடு வெறுக்கும் எலோன் மஸ்க் அதற்குள் நுழைந்தது எப்படி...!
அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை ஆனால் வேறு வழியில்லாமல் கட்சி தொடங்கினேன் என எலோன் மஸ்க் (elon musk)கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலோன் மஸ்க், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து ‘அமெரிக்கா கட்சி’ எனும் அரசியல் கட்சியைத் தொடங்குவதாக ஜூலை முதல் வாரத்தில் அறிவித்தார்.
அரசியலில் நுழைவதில் சற்றும் விருப்பமில்லை
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எலோன் மஸ்க், எனக்கு அரசியலில் நுழைவது என்பதில் சற்றும் விருப்பமில்லை. நான் ரொக்கெட் தயாரிக்கிறேன், கார்களை, கருவிகளை உருவாக்குகிறேன்.ஆனால், தேர்தல் பிரசார வசனங்களை அல்ல. என் நிறுவனம் தயாரிக்கும் பொருள்களை மக்கள் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அதைத் தவிர வேறு எனக்கு எதிலும் ஆர்வமமில்லை.
என்னால் அமைதியாக இருக்க முடியாது
ஆனால், எப்போது, இந்த நாட்டின் அமைப்பு மிக மோசமாக உடைந்து போயிருக்கிறதோ, அப்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது. நாட்டின் எதிர்காலத்துக்கு மோசமான ஆபத்துகள் காத்திருக்கும் என்பதால் வேறு வழியின்றி, அரசியல் கட்சிதொடங்குவது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.
அவர் சிரித்தபடி, மிக சாதாரண உடல் அசைவுகளுடன் மக்களிடையே பேசும் காணொளியையும் அமெரிக்கா கட்சியின் எக்ஸ் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
