நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய கூட்டணி: நிமல் லான்சா வலியுறுத்து
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகளின் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து புதிய கூட்டணியொன்று கட்டமைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா வலியுறுத்தியுள்ளார்.
ஜாஎலவில் புதிய கூட்டணியினால் நேற்று (27) இடம்பெற்ற முதலாவது பொதுக்கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் பேரணியொன்று ஜாஎல நகரில் நேற்று நடைபெற்றது.
கலந்துக்கொண்டோர்
அந்த கூட்டணியின் ஸ்தாபகராக நாடளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவும், செயற்பாட்டுத் தலைவராக அனுர பிரியதர்ஷன யாப்பாவும் செயற்படுகின்றனர்.
இந்த பேரணியில் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திரு பிரியங்கர ஜயரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |