புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து வெளியான அறிவிப்பு
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்படும் என சட்டத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான குழு கூட்டமானது, அர்சகுலரத்ன தலைமையில் நீதியமைச்சில் கூடியுள்ளது.
அடுத்த கூட்டம்
இந்தக் கலந்துரையாடலில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி ஆலோசகருமான நெரின் புல்லே, சிரேஷ்ட டி.ஐ.ஜி. அசங்க கரவிட்ட, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (சட்டம்) பியமுந்தி பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் சட்ட அதிகாரிகள் மேஜர் ஜெனரல் சந்துன் குணவர்தன, லெப்டினன்ட் கேணல் கே.என்.எஸ். மெண்டிஸ் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளார்.
இதன்படி, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழு இதுவரை 14 முறை கூடியுள்ளது.
இதவேளை, குழுவின் அடுத்த கூட்டம் வரும் 22 ஆம் திகதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
