தீவகப் பகுதிகளை இழக்க வேண்டிய நிலை - தமிழ் தேசியம் பேசுவோரும் துணையாம்

Jaffna Gajendrakumar Ponnambalam Ranil Wickremesinghe
By Vanan Aug 03, 2023 02:27 PM GMT
Report

யாழ். தீவகப் பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதன் நிர்வாகத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் புதிய அதிகார சபையை உருவாக்குவதற்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

மகாவலி அபிவிருத்தி திட்டத்தையும் விட மிகவும் மோசமான வகையில் தமிழர்களின் தலைவிதியை முற்றிலும் மாற்றும் இந்த நடவடிக்கைக்கு தமிழ் தேசியம் பேசுவோரும் துணை போகின்றனர் என  முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்..

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழர்களை முட்டாள்கள் ஆக்கும் நடவடிக்கை 

மேலும் தெரிவித்துள்ள அவர், “கடந்த ஒரு வருடமாக தீவகம் முழுவதையும், ஒரு அதிகார சபைக்குள் கொண்டு வந்து, தீவகத்திலிருக்கும் அனைத்து நிர்வாக பணிகளையும் கொழும்பால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செய்வதற்குரிய வகையில அரசாங்கத்தின் திட்டம் அமைந்துள்ளது.

அண்மையில் ரணில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட போதே ஒரு சில புத்தி ஜீவிகளைக்கொண்டு இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உத்தேச சட்டம் மகாவலியை விடவும் மிக மோசமான முறையில் அமைந்திருக்கும்.

முற்று முழுதாக தமிழ் மக்களுக்கு பாதகமான முறையில் அமைவதோடு, அனைத்து செயற்பாடுகளும் கொழும்பில் இருந்தே கட்டுப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு சார்பாக செயற்படும் தமிழத் தரப்புக்களுக்கும் நன்றாகவே தெரியும்.

தீவகத்தை இழக்க வேண்டிய நிலை

தீவகப் பகுதிகளை இழக்க வேண்டிய நிலை - தமிழ் தேசியம் பேசுவோரும் துணையாம் | New Authority To Unify All Island Regions Jaffna

அதுமட்டுமன்றி தமிழ்த்தேசியம் பேசும், தமிழரசு கட்சி, ரெலோ, புளொட் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்பவற்றுக்கும் நன்றாகவே தெரிந்தும் அனைத்தையும் மூடி மறைத்து தமிழர்கள் மத்தியில் ரணிலுக்கு வெள்ளையடிக்கும் மிக மோசமான செயற்பாட்டிற்கும் தீவகத்தை முற்று முழுதாக இழக்க வேண்டிய ஒரு நிலைக்கும் இவர்கள் துணை போகின்றனர்” - என்றார்.

இதேவேளை, 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மற்றுமொரு சந்திப்பிற்கு சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்துள்ளதாக கூறியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியலமைப்பிலுள்ள விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களுக்கு அழைப்பது வடக்கு கிழக்கு ஈழத் தமிழர்களை முட்டாள்கள் ஆக்கும் நடவடிக்கை என சாடியுள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025