வெறும் 10 அமைச்சுக்களுக்காக புதிய பாதீடு - விளக்கமளிக்குமாறு கோரிக்கை
basil
Ranil Wickremesinghe
new budget
By Vanan
கொரோனா தொற்று அடுத்த வருடமும் நாட்டில் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்த அரசாங்கம் புறக்கணிக்க முடியாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ( Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “தற்போதைய தேவைக்கு ஏற்ப வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் இல்லை, சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ஒதுக்கீடுகள் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது என்பது குறித்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விளக்கமளிக்க வேண்டும்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 89 வீதமான நிதி, வெறும் 10 அமைச்சுக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.