வவுனியா நகரசபையில் புதிய வரவு - செலவுத்திட்டம் நிறைவேற்றம்
வவுனியா நகரசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் இதற்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
வவுனியா நகரசபை அமர்வு நேற்று நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்றிருந்தது. இதன் போது 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தினை நகரசபை தலைவரினால் முன்வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் தனுஸ்காந் எதிர்த்து வாக்களித்த நிலையில், ஏனைய 18 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதன் போது 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை நகரசபை உறுப்பினர் எம்.லறீப் வழிமொழிய உபதலைவர் குமாரசாமி வழிமொழித்திருந்தார்.
இப்பாதீட்டில் 10 வட்டாரங்களிற்கு தலா 3.5 மில்லியன் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டதுடன், வட்டார பராமரிப்பு, வருமான மேம்பாடு, தின்மக்கழிவு முகாமைத்துவதும், பொதுவிடயங்கள் உள்ளடங்களாக 86.32 மில்லியன் ரூபாவினை கொண்டமைந்துள்ளது.
மேலும் சுதந்திரக் கட்சியின் நகரசபை உறுப்பினர் திருமதி த.புஞ்சிகுமாரி மரணமடைந்ததை தொடர்ந்து அவருக்கு பதிலாக பிறிதொரு உறுப்பினர் தெரிவு செய்யப்படாத நிலையில் இன்றைய வரவு செலவுத்திட்ட அமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.