அதிஷ்டம் வந்தணைக்கும் - நம்பிக்கையுடன் காத்திருக்கும் பசில்
நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லதொரு வரவுசெலவுத் திட்டத்தை கொண்டு வருவதற்கான அதிஷ்டம் தனக்கு கிடைக்கும் என நம்புவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில், ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் தொடுத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் பதிலளித்த அவர்,
''நான் மக்கள் தொடர்பில் புதிய வரவுசெலவுத் திட்டத்தினை சமர்ப்பிதற்கு முன்னர் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தலதா மாளிகைக்கு வருகை தந்துள்ளேன்.
நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதொரு வரவுசெலவுத் திட்டத்தை கொண்டு வருவதற்கு எனக்கு அதிஸ்டம் கிடைக்கும் என நம்புகின்றேன்.
சீனா, மக்கள் வங்கியினை கறுப்புப் பட்டியல் இட்டமை தான் தற்போது நாட்டில் பேசுபொருளாக இருக்கிறது. இதனால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை'' என சாதாரணமாக பதில் வழங்கினார்.