ரணிலின் அமைச்சரவையில் மேலும் சிலர் இன்று பதவியேற்பு!
புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று மாலை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தமக்குரிய அமைச்சுக்கள் தவிர்ந்த 18 அமைச்சுக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் ஒதுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சு பதவிகளில், பத்து இடங்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் சுயாதீன குழு உறுப்பினர்களுக்கும், எஞ்சியவை சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவற்றை விட மேலதிகமாக 30 ராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக பெண் ஒருவரை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் ரோகினி கவிரத்ன ஆகிய இருவரில் ஒருவர் பிரதி சபாநாயகராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
