மூடி மறைக்கப்படும் செம்மணி விவகாரம் - வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்
புதிய இணைப்பு
யாழ். செம்மணி புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரிய அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
செம்மணி வளைவு அருகே இன்று முற்பகல் 10.10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. நண்பகல் 12 மணிக்கு புதைகுழி கண்டறியப்பட்ட சித்துப்பாத்தி மயானத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகும்.
அங்கிருந்து, செம்மணி வீதி வழியாக மனித சங்கிலி முறைமையில் ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியின் பணிமனை வரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று, மனு கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள "அணையா விளக்கு" போராட்டத்தின் நாளைய இறுதி நாள் நிகழ்வுகளின் ஏற்பாடுகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த போராட்டத்தை ஒழுங்கமைத்து நடத்தும் ஏற்பாட்டுக் குழுவினர் இது தொடர்பில் இன்று பிற்பகல் ஊடக சந்திப்பை நடத்தி இவ்விடையத்தை தெரிவித்திருந்தனர்.
இதன்போது குறித்த ஏற்பாட்டுக்குழு மேலும் கூறுகையில் - அணையா விளக்கு போராட்டம் நேற்று 23.06.2025 முற்பகல் 10.10 மணிக்கு சுடரேற்றலுடன் செம்மணியில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் அரசியல் தரப்பினர், பொது அமைப்புகள், பல்கலை மாணவர்கள், வர்த்தகர்கள் என பலதரப்பட்டவர்களதும் ஆதரவு அதிகளவில் கிடைத்ததால் நாம் எதிர்பார்த்த இலக்கை போராட்டம் எட்டியுள்ளது.
காற்றுடனும் நீருடனும் கலக்கப்படவுள்ளது
இதேனேரம் நாளை குறித்த போராட்டத்தின் இறுதி நாளாகும். கடந்த இரு தினங்கள் போன்று நாளையும் முற்பகல் 10.10 இக்கு அகவணக்கம், மலரஞ்சலி செலுத்தலுடன் ஆரம்பமாகும் இந்த போராடம் மதிதம் 12 மணிக்கு புதைகுழி இருக்கும் சிந்துபாத்தி மயானத்தி இருந்து ஆரம்பமாகி செம்மணி வீதி வழியாக ஊர்வலமாக சென்று ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி யின் அலுவலகம் வரை சென்று அங்கு மகஜர் கையளிக்கப்படவிருக்கின்றது.
இதே நேரம் குதித்த ஊர்வலம் செல்லும் வழியில் தியாகி திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றி அக அஞ்சலி செலுத்தப்படும்.
அதேபோன்று தமிழராச்சி நினைவிடம், யாழ் நூலகம், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுச் சதுக்கம் ஆகிய இடங்களிலும் சுடர் ஏற்றப்படும்.
அதன்பின்னர் குறித்த அணையா விளக்கு காற்றுடனும் நீருடனும் கலக்கப்படவுள்ளது. எனவே நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஊர்வலமானது மனிதச் சங்கிலி முறையில் எவருக்கும் இடையூறுகள் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படவுள்ளதால் அனைத்து தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி வலுப்படுத்துமாறும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
