அரசாங்கத்திற்கு எதிராக பரந்த முன்னணி -வெளியான தகவல்
Dullas Alahapperuma
Ranil Wickremesinghe
Vasudeva Nanayakkara
Wimal Weerawansa
President of Sri lanka
By Sumithiran
அரசாங்கத்திற்கு எதிராக பரந்த முன்னணி
நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக இயங்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணி உட்பட பத்து கட்சிகளின் உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக பரந்த முன்னணியை அமைக்க தீர்மானம் எடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஏனைய சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த முன்னணிக்காக ஒன்றிணைக்கப்படவுள்ளனர்.
ரணில் அரசு மீது நம்பிக்கை இல்லை
இந்தப் புதிய முன்னணியில் இணையவுள்ள எம்.பி.க்கள் எவரும் அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் ஏற்க விரும்பவில்லை என்றும் நாணயக்கார தெரிவித்தார்.
நிதியமைச்சில் நேற்று (ஜூலை 26) இடம்பெற்ற ஆளுங்கட்சி “குழுக் கூட்டத்தில்” பங்கேற்குமாறு பெண் ஒருவர் தமக்கு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் தான் கலந்து கொள்ளவில்லை எனவும் நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
