மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் (Motor Traffic) புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்கவை (Kamal Amarasinghe) நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சரால் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதி பெறப்பட்டது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய நிஷாந்த அனுருத்த வீரசிங்க (Nishantha Anuruddha Weerasinghe) அந்தப் பதவியிலிருந்து விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்படவுள்ளார்.
வீதி மற்றும் போக்குவரத்து அமைச்சு
இதேவேளை அரச சேவையில் புதிய பணியை மேற்கொள்வதற்காக தனது தற்போதைய கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு நிஷாந்த கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
நிர்வாக சேவையில் விசேட தரநிலை அதிகாரியான கமல் அமரசிங்க, இறுதியாக வடமேல் மாகாண சபையின் வீதி மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளராக பணியாற்றியுள்ளார்.
அத்துடன், வடமேல் மாகாண ஆளுநரின் செயலாளராகவும், புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
