தொடரும் ஜேவிபியின் சர்வாதிகார ஆட்சி....! பகிரங்கமாக சாடும் மணிவண்ணன்
ஜேவிபியினர் மாக்சிச லெனினிச கொள்கைகளுடைய ரஷ்யா, சீனா, கியூபா என இடதுசாரிகள் இருக்கின்ற நாடுகளை போல் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுகின்றது என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு நிராகரிப்பட்ட போதும் யாழ் மாநகர சபையில் தமிழ் கட்சி ஒன்றுக்கு எமது ஆதரவு நிச்சயம் இருக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள கட்சி இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், ”வருகின்ற மாதம் இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வருகின்றது. வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் வேட்பு மனுதாக்கல் செய்த நான்கு பிரதேசங்களில் யாழ் மாநகர சபையில் ஒரு வேட்பாளர் அத்தாட்சிப்படுத்தல் பத்திரத்தில் சத்தியப்பிரமாண ஆணையாளரின் உறுதிப்படுத்தல் இன்றி நிராகரிக்கப்பட்டது.
மேலும் மூன்று சபைகளில் இளம் வேட்பாளர் போதாமை காரணமாக நிராகரிக்கப்பட்டது. இது அடிப்படை மனித உரிமைகள் மீறல் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கினை தாக்கல் செய்தோம்.
ஆனால் நீதிமன்று அதனை தள்ளுபடி செய்ததுடன் இதே காரணங்களுக்காக பிறப்பு அத்தாட்சிப்படுத்தல் பத்திரம் உறுதிப்படுத்த முடியாத காரணத்துக்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுகொள்ளுமாறு ஏனைய தரப்புக்களுக்கு உத்தரவு வழங்கியது.
இலங்கை தேர்தல் திணைக்களத்தினால் ஒரு நீதிமன்று மற்றைய நீதிமன்றுக்கு முரணாக இருந்தது. சட்ட சிக்கல்களை உருவாக்கியது. வழக்கு தாக்கல் செய்பவருக்கு மாத்திரமே தீர்வு என்ற போர்வையில் காரணங்கள் இருந்தது.
தேர்தல் ஆணைக்குழு
ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் சொன்னது போல ஏப்ரல் 20க்கு முன்னர் வழக்கு தாக்கல் செய்ய கூறினார்கள். நாங்கள் இதற்காக பல இலட்சங்களை செலவு செய்ய வேண்டி ஏற்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்று ஒரு தீர்வை வழங்கினால் அது அனைவருக்கும் பொருந்தும் என தெரிந்தும் எம்மை வழக்கு தாக்கல் செய்ய வைத்து நீங்கள் காலதாமதமாகி விட்டது என கூறி எதிருங்கள் என மறைமுகமாக ஜனநாயகத்தை எள்ளி நகையாடி நடைபெறும் தேர்தல் இதுவாகும்.
சிஸ்டம் சேஞ் என்றார்கள் ஆனால் ஜனநாயகத்தை புதைக்கின்றார்கள். ஜேவிபியின் முன்னர் கருதப்பட்ட மாக்சிச லெனினிச கொள்கைகள் உடைய ரஷ்யா, சீனா, கியூபா என இடது சாரிகள் இருகின்ற நாடுகளை போல மிக ஜனாநாயக விரோதமாக செயற்படுகின்றது.
தேர்தல் திணைக்களத்தின் ஊடாக தேர்தல்களை இல்லாது செய்கின்ற சூழலும் ஏற்படும். ஜனநாயகம் நிலை நாட்டப்பட வேண்டுமானால் இந்த தேர்தலை சரியாக பயன்படுத்த வேண்டும்.
மாநகர சபையில் பணியாற்றினோம்
ஊழல், பொருளாதார மீட்சி என கூறி இவ்வாறான தரப்புக்களை ஜேவிபியை மண்ணிலே வேரூன்ற விடாது பொறுப்புடன் செயற்படவேண்டும். எங்களுடைய மாநகர சபையில் நாம் கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்டோம். ஆகவே இங்கே மாநகர மக்களின் வாக்குரிமையும் கேள்விக்குள்ளானது.
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னாரில் நாம் ஜனநாயக ரீதியாக போட்டியிட்டு வருகின்றோம். இளமையான துடிப்பான நேர்மையான எமது இளம் வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
சதி நடவடிக்கைகளுக்குள் சிக்குண்டாலும் நாம் பல அடி தாண்டி பாய்வோம். நாம் ஏனைய சபைகளைக் கைப்பற்றுவோம். நல்லூர் பிரதேச சபை, காரைநகர் பிரதேச சபையினையும் கைப்பற்றுவோம்.
எங்களுடைய இருப்பினை நாம் தக்கவைப்போம். மாநகர சபையில் இருவருடம் செய்த சேவைகளை ஏனைய சபைகளிலும் மேற்கொள்வோம். ஏனைய கட்சிகள் தமிழ் தேசியத்துடன் இணையுமானால் நாம் எங்களுடைய ஆதரவினை குறித்த ஒரு கட்சிக்கு வழங்குவோம்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
