புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்
appointment
examinations
new-commissione
By Jaso
எல்எம்டி கல்வி நிர்வாக சேவையில் மூத்த அதிகாரியாக உள்ள தர்மசேன(Dharmasena) புதிய பரீட்சை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளராக பணியாற்றினார்.
அத்துடன் கொழும்பு ஆனந்தா மற்றும் மஹாநாம கல்லூரிகளின் அதிபராகவும் கடமையாற்றியதுடன், இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அண்மையில் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்