விதிமுறைகளை மீறி நடந்த திருமணம்! தம்பதிகள் உட்பட 11 பேருக்கு தொற்றியது வைரஸ்
corona
sri lanka
people
By Shalini
கொஸ்வத்த - மத்திய கிரிமெடியான கிராம சேவகர் பிரிவுக்கு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தங்கொடுவ பிராந்திய சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் சுகாதார விதிகளை பின்பற்றாமல் நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமகன் மற்றும் மணமகள் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்தே இன்று காலை முதல் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
கடந்த 9 ஆம் திகதி மத்திய கிரிமெடியான பகுதியில் இந்த திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து குறித்த திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 140 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன் முடிவில் 11 பேர் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்ததாக தங்கொடுவ சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்