20க்கு 20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு அணி பெற்ற மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை; முறியடிக்கப்பட்டது பழைய சாதனை!
ஆடவருக்கான 20க்கு 20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு அணி பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழில்முறை கிரிக்கெட் போட்டி ஒன்றிலேயே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் போட்டியில் இந்த மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
குறைந்த ஓட்ட சாதனை
அவுஸ்திரேலிய பிக் பாஷ் லீக் ஆட்டத்தில் எடிலெய்ட் ஸ்ட்ரைக்கர் மற்றும் சிட்னி தண்டர் ஆகிய அணிகள் மோதி இருந்தன.
இந்த போட்டியில், 140 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிட்னி தண்டர் அணி 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தமது அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
தொழில்முறை 20க்கு 20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு அணி பெற்றுக்கொண்ட மிகக் குறைவான ஓட்டமாக இது பதியப்பட்டுள்ளது.
பழைய ஓட்ட சாதனை
இதற்கு முன் 2019 ம் ஆண்டு செக் குடியரசுக்கு எதிரான ஆட்டத்தில் துருக்கி அணி 21 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தமையே இதுவரை சாதனையாக இருந்தது.
இதன் மூலம், இதற்கு முன் இருந்த 21 ஓட்டங்கள் என்ற குறைந்த ஓட்ட சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

