சூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு : அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
புளூட்டோ கிரகத்தையும் தாண்டி, சூரிய மண்டலத்தின் விளிம்பில் ஒரு பெரிய மற்றும் மர்மமான கிரகம் நமது பார்வையிலிருந்து விலகி பதுங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அந்த கிரகத்திற்கு 'பிளானட் நைன்' (9வது கிரகம்) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சூரியனைச் சுற்றி வரும் பூமி உள்ளிட்ட கிரகங்கள் சூரியக் குடும்பத்தில் அடங்கும். அதேபோல், சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள நட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகங்கள் அல்லது வெளிப்புற கோள்கள் (எக்ஸோபிளானட்ஸ்) என்றழைக்கப்படுகின்றன.
சூரிய மண்டலம்
இந்தநிலையில், ஒரு காலத்தில் சூரியன் உள்பட 7 கிரகங்கள் மட்டுமே அறியப்பட்ட நிலையில், விஞ்ஞானிகளின் தொடர் ஆராய்ச்சியால், சூரிய மண்டலத்திலேயே அதிக தொலைவில் அமைந்துள்ள சனி கிரகத்திற்கும் அப்பால், யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ உள்ளிட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.
இன்றும் புளூட்டோ கிரகத்திற்கும் அப்பால் கிரகங்கள் உள்ளதா? உயிரினங்கள் வாழ்கிறதா? என்ற விஞ்ஞானிகளின் சந்தேகம் இன்னும் தீர்ந்தபாடில்லை.
1930-ஆம் ஆண்டில், வானியலாளர்கள் பிளானட் 'எக்ஸ்'-ஐ தேடிக்கொண்டிருந்தபோது, அவர்கள் புளூட்டோவைக் கண்டு பிடித்தனர்.
அதன் ஒரு பகுதியாக தற்போது புளூட்டோ கிரகத்தை தாண்டி, சூரிய மண்டலத்தின் விளிம்பில் பெரிய மற்றும் மர்மமான கிரகம் நமது பார்வையிலிருந்து விலகி பதுங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த கிரகத்திற்கு தற்போது 'பிளானெட் நைன்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிளானட் நைன்
கடந்த வாரம், அமெரிக்கா நியூஜெர்சியின் மேம்பட்ட ஆய்வு நிறுவன விஞ்ஞானி சிஹோவோ செங் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவின்படி, இந்த புதிய கிரகம் தோராயமாக 700 கி.மீ. அகலம் கொண்டது. இது புளூட்டோவை விட 3 மடங்கு சிறியதாகவும் இருக்கிறது.
இந்த கிரகம் தற்போது பூமியிலிருந்து நெப்டியூனை விட 3மடங்கு தொலைவில் உள்ளது. மேலும் அதன் மிக நீளமான சுற்றுப்பாதை பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தை விட 1,600 மடங்கு அதிகமாக நகர்ந்து, சூரிய மண்டலத்தைச் சுற்றியுள்ள பனிக்கட்டி பாறைகளின் வளையத்திற்குள் செல்கிறது.
இந்த கிரகம் கடந்த காலத்தில் நமது சூரியனைத் தவிர வேறு நட்சத்திரங்களைக் கடந்து சென்றிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
