வன்னியில் புதிய முகங்களாக நாடாளுமன்றம் பிரவேசிக்கும் மூவர்!

Vavuniya Selvam Adaikalanathan General Election 2024 National People's Power - NPP
By Shadhu Shanker Nov 15, 2024 04:11 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்கமைய, நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் புதிய முகங்களாக மூவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

அதற்கமைய, தேசிய மக்கள் சக்தி சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள செ. திலகநாதன் எனப்படுகின்ற சக்தி ஒரு மிருக வைத்தியராவார்.

இவர், கடந்த முறை இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஊடாக தேர்தலில் பங்கேற்று அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருந்த போதிலும் நாடாளுமன்றத்துக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டிருந்தது.

இவர் தற்போது தேசிய மக்கள் சக்தியின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டு 10,652 விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கின்றார்.

சமூக விரோதிகளை நிராகரித்த தமிழ் மக்கள்! இது ஆரம்பம் மட்டும் தான்.. சாணக்கியன் பகிரங்கம்

சமூக விரோதிகளை நிராகரித்த தமிழ் மக்கள்! இது ஆரம்பம் மட்டும் தான்.. சாணக்கியன் பகிரங்கம்

 ம. ஜெகதீஸ்வரன் 

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள ம. ஜெகதீஸ்வரன் ஆசிரிய சேவா சங்கத்தின் வடமாகாண தலைவராகவும் தேசியமட்ட உப தலைவராகவும் செயற்பட்ட நிலையில் கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக ஆசியர்கள் சார்பான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று ஆசிரியர்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து இருந்தார்.

வன்னியில் புதிய முகங்களாக நாடாளுமன்றம் பிரவேசிக்கும் மூவர்! | New Faces Elected In Vanni Parliamentary Poll

இவர் தற்போது 9,280 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள தமிழரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளர் சிவஞானம் சிறீதரன்

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள தமிழரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளர் சிவஞானம் சிறீதரன்

துரைராசா ரவிகரன்

மற்றையவர் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட துரைராசா ரவிகரன் ஆவார்.

வன்னியில் புதிய முகங்களாக நாடாளுமன்றம் பிரவேசிக்கும் மூவர்! | New Faces Elected In Vanni Parliamentary Poll

இவர் பல்வேறு மக்கள் சார் போராட்டங்களில் பங்கேற்று இருந்ததோடு குருந்தூர்மலை உட்பட வடக்கில் மேற்கொள்ளப்பட்ட பல போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட ஒருவராக காணப்படுகின்றார்.இவர் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினராகவும் செயற்பட்டிருந்தார்.

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் 11,215 விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

அதிர்ச்சியில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் : மக்கள் கொடுத்த சாட்டையடி

அதிர்ச்சியில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் : மக்கள் கொடுத்த சாட்டையடி

கே. கே மஸ்தான்

இதேவேளை பழைய முகங்களாக ரிசார்ட் பதியுதீன் இம்முறை 21,018 விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருந்த போதிலும் கடந்த முறை 28 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தார்.

வன்னியில் புதிய முகங்களாக நாடாளுமன்றம் பிரவேசிக்கும் மூவர்! | New Faces Elected In Vanni Parliamentary Poll

இவரின் தற்போதைய வாக்கு வீதம் சரிந்து இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

கே. கே மஸ்தான் கடந்த இரண்டு தடவைகள் நாடாளுமன்றத்திற்கு சென்று இராஜாங்க அமைச்சராக இருந்த போதிலும் தற்போது புதிய சின்னமாக இலங்கை தொழிலாளர் கட்சியினூடாக கங்காரு சின்னத்தின் ஊடாக போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கின்றார்.

செல்வம் அடைக்கலநாதன்

மஸ்தானை பொறுத்தவரை குறித்த கட்சியையும் சின்னத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பாரிய சிரமத்தை எதிர்கொண்ட நிலையிலும் கூட அவருடைய பிரசாரத்தின் யுக்தியின் அடிப்படையில் அவர் வெற்றி வாய்ப்பை அடைந்திருக்கின்றார்.

வன்னியில் புதிய முகங்களாக நாடாளுமன்றம் பிரவேசிக்கும் மூவர்! | New Faces Elected In Vanni Parliamentary Poll

இம்முறை 13,511 க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி இருப்பதோடு கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் இதே அளவான விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.

அடுத்து செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினூடாக போட்டியிட்டு வடக்கு கிழக்கில் ஒரே ஒரு ஆசனத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கின்றார்.

இவர் 25 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தற்போது மீண்டும் 5 வருட நாடாளுமன்ற உறுப்புரிமையை அலங்கரிப்பதற்காக செல்கின்றார்.

எனினும் சடுதியான வாக்கு சரிவை சந்தித்து 5,695 வாக்குகளை பெற்று இம்முறை நாடாளுமன்றம் செல்லும் இவர், அகில இலங்கை ரீதியில் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவானோரில் மிகக் குறைந்த வாக்குகளை பெற்றவராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ரவிகரன்: முள்ளிவாய்க்காலில் மலர் தூவி அஞ்சலி

நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ரவிகரன்: முள்ளிவாய்க்காலில் மலர் தூவி அஞ்சலி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                           
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025