சுவிஸின் மிகப்பெரிய நகருக்கு நேரடி விமானம்! ஐரோப்பிய பயணிகளுக்கு முக்கிய தகவல்
United Nations
Switzerland
Zurich
World
By Dilakshan
ஐடல் வெய்ஸ் (Edelweiss) நிறுவனம் கொழும்பு மற்றும் சூரிச் இடையேயான நேரடி விமான சேவையை 2025 ஒக்டோபர் 28 முதல் மீண்டும் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த சேவை வாரத்தில் இரண்டு முறை, செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை, பயணிகளுக்காக செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா பயணம்
இந்த புதிய சேவையின் மூலம் பயணிகள் சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச் வழியாக ஸ்விஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் மற்றும் லூஃப்ட்ஹான்ஸா விமான சேவைகளுடன் இணைந்து பயணம் செய்ய முடியும்.
இதன் மூலம் இலங்கையிலிருந்து ஐரோப்பா பயணம் செய்யும் பயணிகள் அதிக வசதியை அனுபவிக்கலாம் என கூறப்படுகிறது.
இதேவேளை, ஐடல் வெய்ஸ் / சுவிஸ் விமான சேவையின் தொடக்கத்தை சிறப்பிக்க சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி