எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
புதிய பெறுமதிசேர் வரி சட்டத்தின் மூலம் ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒரு லீற்றர் பெட்ரோல் 62.37 ரூபாவினாலும், டீசல் லீற்றர் 59.22 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித இன்று (11) தெரிவித்துள்ளார்.
இதனால் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 400 ரூபாவிற்கும் அதிகமாகவும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 400 ரூபாவை அண்மித்த விலையில் இருக்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய கட்டணங்கள்
தற்போது, டீசல் லீற்றர் 329 ரூபாவாகவும், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 346 ரூபாவாகவும் காணப்படுவதாகவும், எரிபொருளுக்காக இதன்போது நான்கு வகையான வரிகள் அறவிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு லீற்றர் எரிபொருளின் விலை ஏற்கனவே 125 ரூபாவுக்கும் அதிகமாக உள்ளதாகவும், எரிபொருள் வரி மூலம் அரசாங்கம் மாதாந்தம் 1500 கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தைப் பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், எரிபொருள் கட்டண அதிகரிப்புடன் மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களும் ஜனவரி முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |