அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி!
Sri Lanka
Government Of Sri Lanka
President of Sri lanka
Sri Lanka Government Gazette
New Gazette
By Pakirathan
அரச நிறுவனங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி உத்தரவின்படி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் பல நிறுவனங்களை கொண்டு வரப்பட்டுள்ளன.
அமைச்சின் கீழ்
இதற்கமைய, சிறிலங்கா டெலிகொம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள், கொழும்பு தாமரைக்கோபுர முகாமைத்துவ நிறுவனம், சிறிலங்கா த்ரிபோஷ கூட்டுத்தாபனம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம், பரந்தன் இரசாயன நிறுவனம், மகிந்த ராஜபக்ச தேசிய டெலி சினிமா பூங்கா போன்ற முக்கிய நிறுவனங்கள் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கொண்டுவரப்பட்டுள்ளது.

