நாட்டை கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் தேவை என்கிறார் – லால்காந்த!
நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும், என்று தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த கூறினார்.
நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகிறது. மக்கள் தமது ஜீவனோபாயத்திற்காக பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் அரசியல் சீர்குலைந்து காணப்படுகிறது எனவே நாட்டின் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தல் இடம்பெற வேண்டும்
மக்கள் இப்போது தேர்தல் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள், இந்நிலையில் ஆட்சியாளர்கள் தேர்தலை நடத்தாமல் பலவந்தமாக ஆட்சியில் இருக்க முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும், தேவையேற்படின் அனைத்து தேர்தல்களையும் ஒன்றாக நடத்தினாலும் நன்று தான் என்கிறார். கடினமாக நகர்ந்து செல்லும் மக்களின் வாழ்க்கை முறையை செயற்படுத்த புதிய அரசை அமைக்க வேண்டியது கட்டாயம் என்றும் அவர் கூறினார்.
"அரசியலில் உள்ள எதிரிகள்,மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து எங்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கின்றனர்" என்று லால்காந்த சுட்டிக்காட்டியதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.