புதிய அரசாங்கத்தின் சோசலிச கொள்கை தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லை! முன்னாள் எம்.பி சிவசக்தி ஆனந்தன்
புதிய அரசாங்கத்தின் சோசலிச சமத்துவம் என்ற கொள்கை தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத ஒன்று என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னிமாவட்ட வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று(11.11.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சனைகள்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் பல பிரச்சனைகள் இங்கு தீர்க்கப்படவில்லை.
தங்களின் பிரச்சனைகளை தீர்க்க எந்த ஒரு தரப்பும் முன்வரவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
புதிய அரசாங்கம் சோசலிசம் சமத்துவம் என்ற கொள்கையை முன்னிறுத்தி ஆட்சியை முன்னெடுக்கிறது. இது சிங்கள மக்களுக்கு பொருத்தமாக இருக்கும் தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத ஒன்று.
சுயநிர்ணய உரிமை
எமக்கு நீண்டகால பிரச்சனை உள்ளது. சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ச்சியாக எமது மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு நடைமுறைக்கு சாத்தியமான ஒரு விடயத்தை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |