நாளை முதல் புதிய நடைமுறை - வெளியானது அறிவிப்பு (விபரம் இணைப்பு)
இலங்கையில் நாளை முதல் பொது ஒன்றுகூடல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அசேல குணவர்தன (Asela Gunawardana) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டம் ஒன்றை நாளைய தினம் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் திட்டமிட்டுள்ள நிலையில், எதிர்வரும் 5 நாட்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இலங்கையில் நாளை 16 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை பொது ஒன்றுகூடல்களுக்கு தடைவிதிப்படவுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, நவம்பர் 1 ஆம் திகதிமுதல் 15 ஆம் திகதிவரை நடைமுறையிலிருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, மறு அறிவித்தல்வரை பொதுக் கூட்டங்கள், கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் 30 வீதமாக இருந்த உடற்பயிற்சி நிலையங்களில் அனுமதிக்கான அளவு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் வழமைப்போன்று 50 சதவீதத்துடன் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
அத்துடன் திரையரங்குகளில் இடமளிக்கும் அளவு 25 வீதததிலிருந்து முதல் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன், பாலர் பாடசாலைகளை முழுயான திறனுடன் இயக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வழிபாட்டுத் தலங்களில் தனிநபர் வழிபாடுகளுக்கு மாத்திரம் அனுமதிக்கப்படுவதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று வெளியான புதிய சுகாதார வழிகாட்டல் இணைக்கப்பட்டுள்ளது,
