புதிய காவல்துறை மா அதிபர் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
காவல்துறை மா அதிபர் அல்லது பதில் காவல்துறை மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவினால்(EC) தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இன்றையதினம்(30) தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்றுகூடிய போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, காவல்துறை மா அதிபர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடந்த 24ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிறப்பிக்கவுள்ள உத்தரவு
தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுத்து இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்ததை அடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |