காத்தான்குடியில் இருந்து புறப்பட்ட கொலைக்குழு! 18 வருடங்களின் பின் விலகும் மர்மம்
2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ்நாடு மனோகரன் படுகொலை தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
தமிழ்நாடு மனோகரன் மட்டக்களப்பு, ஆரியம்பதியைச் சேர்ந்த தமிழரசு கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் ஒருவர் ஆவார்.
2008 நவம்பர் 13 அன்று, அவரது வீட்டில் புகுந்த ஆயுதக்குழு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்து, பின்னர் 2009 ஜனவரி 14 அன்று உயிரிழந்தார்.
கடந்த 18 ஆண்டுகளாக இந்தப் படுகொலைக்கு பிள்ளையான் தலைமையிலான TMVP அமைப்பே காரணம் என்று பரவலாக நம்பப்பட்டது.
ஆனால், அண்மைய சாட்சியங்களின் அடிப்படையில், இந்தப் படுகொலை காத்தான்குடியை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு குழுவினாலேயே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது.
இந்த கொலைக்கு ஆரியம்பதி மற்றும் காத்தான்குடி ஆகிய இரு பிரதேசங்களுக்கு இடையே நிலவிய நில ஆக்கிரமிப்புப் பிரச்சினைகள் மற்றும் மனோகரன் இதற்கு எதிராக முன்னெடுத்த போராட்டங்கள் முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
அந்த வகையில் இந்த படுகொலை தொடர்பில் வெளிவரதாக பல மர்மங்கள் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |