நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்! ரணில் வெளியிட்டுள்ள அறிவிப்பு
தற்போது நாட்டில் அனைவரும் வெப்பமான காலநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்துள்ளார்.
"நமது தேசத்திற்கும் கிரகத்திற்கும் காலநிலை நடவடிக்கை" என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது '' சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் இரண்டையும் கையாளும் ஒரு சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.
இது மத்திய சுற்றாடல் அதிகார சபையை தொடர்ந்து இயக்கும் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையத்தையும் உள்ளடக்கும். இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன." என்றார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |