ட்ரம்ப் அதிகாரிகளுடன் மொசாட் புதிய தலைவர் இரகசியப் பேச்சு: குறிவைக்கப்படும் ஈரான்
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் (Mossad) புதிய தலைவர் ரொமான் கோஃப்மேன் (Roman Gofman) அமெரிக்க அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வாஷிங்டனில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நிலைமை
இந்த இரகசியச் சந்திப்பின் போது, ஈரானின் பிக்ஏக்ஸ் மவுண்டன் (Pickaxe Mountain) அணுசக்தி மையம், ஈரானின் யுரேனியம் கையிருப்பு மற்றும் அந்நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான முக்கிய உளவுத் தகவல்களை ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் அவர் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிக்ஏக்ஸ் மவுண்டன் என்பது ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய, நிலத்தடியில் மிகவும் பாதுகாக்கப்பட்ட மற்றும் பலப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய அணுசக்தி தளமாகும்.

இச்சந்திப்பு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்குமாறு வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க மத்திய உளவு முகமையிடம் (CIA) சர்வதேச ஊடகங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இராணுவச் செயலாளராகப் பணியாற்றிய ரொமான் கோஃப்மேன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மொசாட் உளவு அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 10 மணி நேரம் முன்