இலங்கையில் கொரோனா உயிரிழப்பு - வெளிவந்த புதிய தகவல்
srilanka
corona
death
Dr. Hemantha Herath
By Jaso
நாட்டில் கொரோனா தொற்றால் அண்மைக்காலமாக உயிரிழப்போர் தொகை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 69 சதவீதமானவர்கள் எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெறாதவர்களாவர் என சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Dr. Hemantha Herath)தெரிவித்தார்.
அத்துடன் 31 சதவீதமானவர்கள் ஒன்று மற்றும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா மரணங்களில் 77 சதவீதமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவித்த அவர், 30 வயதுக்கு குறைவானவர்களின் மரண சதவீதம் 1.2ஆக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்