கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படப்போகும் மாற்றம்
Bandaranaike International Airport
Nimal Siripala De Silva
Negombo
By Kathirpriya
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய பயணிகள் முனையத்தில் 30 புதிய புறப்படும் கவுண்டர்கள் நிறுவப்படும் என அதன் செயலாளர் ருவன்சந்திர குறிப்பிட்டார்.
கட்டுமான செலவு
தற்போதுள்ள பயணிகள் முனையத்தில் போதிய இடவசதி இல்லாததால், புதிய பயணிகள் முனையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் கட்டுமானப் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உள்ளூர் கட்டுமான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.
கட்டுமான செலவு சுமார் 2.5 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி