புதிய பதவிகள்- சொகுசு வாகனங்கள்! ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ராஜ யோகம்?
srilanka
colombo
development
political
parliament
By S P Thas
தற்போதைய சூழ்நிலையல் ஆளும் கட்சியை சேர்ந்த 58 நாடாபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கண்காணிப்பு உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நெருக்கடியான இந்த நேரத்திலத் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கான நியமனக் கடிதம் அடுத்த வாரம் நிதி அமைச்சின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக குறித்த ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இவ்வாறு நியமனம் பெறும் உறுப்பினர்களுக்கு அரச வாகனம், எரிபொருள் மற்றும் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.