காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஜனாதிபதி சமிக்ஞை காட்ட வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Missing Persons Vavuniya Children's Day SL Protest President of Sri lanka
By Sathangani Sep 28, 2024 10:05 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

புதிய ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்ஞையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.

இன்று (28) அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. இறுதி யுத்தத்தின் போது சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செல்வீச்சுக்களினாலும் விமான குண்டு தாக்குதலாலும், உடல் சிதறியும், படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இதுவரை இதற்கு நீதி கிடைக்கவில்லை.

வவுனியாவில் ஆரம்பமான தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம்

வவுனியாவில் ஆரம்பமான தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம்

சர்வதேச நீதிப்பொமுறை

மேலும் இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் குடும்பம் குடும்பமாக இடம்பெயரும் போது தங்களது பிள்ளைகளை கையிலே ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் பச்சிளங்குழந்தைகளும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களா, இவர்களுக்கு என்ன நடந்தது.

கடந்த எட்டு தசாப்த காலமாக பதவி வகித்த எட்டு ஜனாதிபதிகளிற்கே யுத்தத்தை நடாத்திய பொறுப்பு இருக்கின்றது. இந்நிலையிலே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் வீதியிலே போராடிக் கொண்டிருக்கிறோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஜனாதிபதி சமிக்ஞை காட்ட வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | New President Should Give Solution Missing Persons

ஆட்சியாளர்கள் மாறுகின்றார்கள், ஆட்சியும் மாறுகின்றது. தற்போது மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்றாலும் கூட அது எந்தவகையில் எமக்கான மாற்றத்தை தரும் என்பது தெரியாது. சர்வதேச நீதி பொறிமுறைமையை மட்டுமே நாம் இன்று வரை நம்பியிருக்கின்றோம்.

குறிப்பாக உள்ளக முறையில் எந்தவித நம்பிக்கையும் இல்லாத காரணத்தினால் நாங்கள் சர்வதேச நீதிப்பொமுறைக்காகவே இதுவரை போராடிக் கொண்டிருக்கின்றோம்.

எரிபொருள் விலை குறைப்பு: ஜனாதிபதியிடம் வலியுறுத்திய முன்னாள் அமைச்சர்

எரிபொருள் விலை குறைப்பு: ஜனாதிபதியிடம் வலியுறுத்திய முன்னாள் அமைச்சர்

கவனயீர்ப்பு போராட்டம்

300க்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் போராடிக்கொண்டிருந்த தாய் தந்தையரை இழந்த நிலையிலும் அவர்களின் ஏக்கத்திற்காகவும் நாம் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஜனாதிபதி சமிக்ஞை காட்ட வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | New President Should Give Solution Missing Persons

இலங்கையில் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுபவர்களிற்கு ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றோம். எமது உறவுகள் எத்தனை பச்சிளங் குழந்தைகளையும், பாடசாலை மாணவர்களையும் இழந்து அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற ஏக்கத்துடனும் தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை உங்கள் பிள்ளைகளாக நேசியுங்கள். எனவே சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் 1ஆம் திகதி அன்று வடக்கு கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம்.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10.00 மணிக்கு குறித்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். எனவே இப்போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

ஜனாதிபதியால் மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதியால் மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

இலங்கையின் ஜனாதிபதிகள்

இலங்கை அரசானது 75 வருடகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றி இருந்தது. பரம்பரை பரம்பரையாக 08 ஜனாதிபதிகள் மாறி மாறி ஆட்சி செய்திருந்த நிலையிலே எங்களுக்கு எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை.

எனவே எந்த நிலையிலும் எந்த ஒரு அரசையும் நம்பவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஜனாதிபதி சமிக்ஞை காட்ட வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | New President Should Give Solution Missing Persons

குறிப்பாக சர்வதேச பொறிமுறையின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக் கொடுத்து மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் நிலையில் புதிய ஜனாதிபதியை பற்றி யோசிக்க முடியும்.

எந்த ஜனாதிபதி வந்தாலும் எமக்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதையே சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம். எனவே புதிய ஜனாதிபதி ஏதாவது ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும்“ என தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்த எம்.பிக்கள் ....பொதுத் தேர்தலில் இரண்டாக பிளவு

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்த எம்.பிக்கள் ....பொதுத் தேர்தலில் இரண்டாக பிளவு



YOU MAY LIKE THIS


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025