வவுனியாவில் ஆரம்பமான தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) மத்திய குழு கூட்டம் வவுனியாவில் இன்றைய தினம் (28) இடம்பெற்று வருகின்றது.
வவுனியாவில் (Vavuniya) உள்ள விருந்தினர் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தலைமையில் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்துகொண்டோர்
அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், இரா.சாணக்கியன், கலையரசன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன் மற்றும் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி தவராசா கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை பொதுத்தேர்தலில் நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி விட்டு ஆற்றல்மிக்க புதிய முகங்களை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்க வேண்டும் என நேர்காணல் ஒன்றில் சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |