கார்கள் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
                                    
                    Sri Lankan Peoples
                
                                                
                    vehicle imports sri lanka
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    நாட்டில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வற் வரியானது, 15 சதவீத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை 18 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதி
அத்துடன், வற் அதிகரிப்பின் காரணமாக உதிரி பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, வாகன இறக்குமதிக்குத் தேவையான அந்நிய செலாவணி நாட்டில் இல்லாததன் காரணமாக வாகன இறக்குமதிகளுக்கு தற்போதைக்கு சாத்தியமில்லை என ஏற்கனவே அறிவிக்கப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        